நான் அறிந்த சமுதாயம்
நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து மனிதநேயம் ஏட்டு வடிவிலே கண்டு படித்துள்ளேன். நான் கல்லூரியில் பயிலும் காலத்தில் ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த மனித வாழ்வில் நான் இரயிலில் பயணம் செய்து கொண்டுருந்த போது குழந்தை அழுவதை பார்த்தேன். அந்த குழந்தை ஒரு பழங்குடியினருடையது. அவர்கள் ஏழ்மை என்னை ஏதும் செய்யாத கையாழ் ஆக்கிவிட்டது. அப்போது பயணியில் ஒருவர் தான் வியாபாரம் செய்ய வைத்திருந்த பால் பேழையில்(tin) இருந்த பாலை எடுத்து அந்த குழந்தையின் பசியை தீர்த்தார். அந்த குழந்தையின் அழுகை பலருக்கும் ஏளனமாக எண்ணி தன் கைபேசியையும் மடிக்கணினியிலும் அதை ரசித்தவாறு அவர்கள் வேலையை பார்த்து கொண்டு போயினர். அது எனக்கு என்னை அறியாமல் கண்களில் நீர் வர அரம்பித்தது. தினசரி கூலிக்காக போராடுபவன் இதயத்தில் ஈரம் நிறைந்துள்ளது. நாள ஒன்றில் பல லட்சங்கள் சம்பாதிப்பவன் மனதில் தயக்கமே நிறைந்துள்ளது. இதில் பலரின் இலட்சியங்கள் இயலாது போயின.பிறகு மாலை நேரத்தில் பள்ளி பருவத்திலேயே காதல் காட்சிகள் பின்னர் சண்டை காட்சிகள். காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாத பருவத்தில் தன்னை மறந்து தவறுகள் திருத்தி கொள்ள தெரியாத உணர்வுகள் நாம் அளிக்கும் அறிவுரையும் வீணாகும். நாடே போகும் நாகரிகம் வீணானது நம் சமுதாயம்.
Comments
Post a Comment