நட்பு
இந்த கதையில் வரும் இரண்டு நண்பர்களின் தியாகத்தை பற்றியும் நட்பின் அழத்தை பற்றியும் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு
இந்த கதையின் தொடக்கம் குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்து தொடங்குகிறது. அங்கு விஷ்ணு என்னும் பத்து வயது சிறுவன் வளர்ந்து வந்தான். பழக கூட நண்பர்கள் இல்லாத நேரத்தில் தனிமையே அவனை அரவணைத்துக் கொண்டது.
அப்போது குழந்தை இல்லாத ஒரு தம்பதியர் அவனை தத்து எடுத்து தன் பிள்ளையை போல் வளர்க்கலாம் என்று அந்த சிறுவனை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு பள்ளியில் சேர்ந்து படித்தான். இரண்டு மாதங்கள் போயின. தேர்வுகளில் எல்லாம் விஷ்ணுவே முதலிடம் பிடித்தான். அதை கண்டு பலரும் அச்சரியத்தில் ஆழ்ந்தனர். பெற்றவர்களுக்கு பெறுமை ஆனால் சில பேருக்கு அதை கண்டு ஆத்திரத்தை வளர்த்து கொண்டனர். அப்போது விஷ்ணுவுடன் கதிர் எனும் தன் கூட படிக்கும் பையன் தன் அறிமுகத்தொடு நட்பிற்கு தூது விடுத்தான்.அப்போதிலிருந்து இருவரும் படிக்கும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினர்.
இதை கண்ட ராம்மிற்கு மிகவும் கோபம். அது வரை அவனே பள்ளியில் முதல் இடம் பிடித்தான். அவனும் அவர்களுடன் சேர்ந்து நண்பனாகி இருவரையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தான். அப்போது முழு ஆண்டு தேர்விற்கு முன்னாடி ஒரு நாள் ராம் அவர்கள் இருவரின் புத்தகத்தையும் ஏடுகளையும் வாங்கிக் கொண்டான் பின் இருவரின் அவன் கேட்டான் என்று விஷ்ணுவிடம் கதிரைப் பற்றி கூற. கதிரிடம் விஷ்ணுவைப் பற்றி கூறினான். தேர்வுகள் முடிந்த பின் கதிரும் விஷ்ணுவைப் பற்றி கூறினான். தேர்வுகள் முடிந்த பின் கதிரும் விஷ்ணுவும் முதல் இடம் பிடித்தார்கள். மறுபடியும் இதை கண்ட ராம் அதிர்ந்து நோய்வாய் பட்டான்.
அவனை காண இருவரும் அவன் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தனர். தினமும் சென்று அவன் தன்மையையும் அவனது திமிரையும் போக்கினர். பின், ராம் தான் செய்த எல்லாவற்றையும் கூறி மன்னிப்புக் கேட்டான் ஆனால் அதை இருவரும் முன்பே அறிந்து விட்டனர் ஆனாலும் அவன் மீது கோப படாமல் நட்பை வெளிப்படுத்தினர். வயது பத்து லிருந்து நூறு ஆனாலும் நட்பு என்பது தண்ணீர் மேல் படர்ந்த தாமரையைப் போல இரண்டும் ஒன்றாக இருந்தாலும் தான் அழகு இது இந்த கதையைப் படிக்கும் தோழர்களுக்கும் தோழர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
Comments
Post a Comment