காதல்



நான்   கல்லூரியில்   படித்த   காலத்தில்   என்   நண்பன்   அவனது காதல்   அனுபவங்களை   பகிர்ந்து   கொள்ளுவான்.   அதில்   சில துளிகளே   இது.   அவனது   பெயர்   யோகேஷ்   அந்த   பெண்ணின் பெயர்   கிருத்திகா.   அவனது   பேச்சில்   இருந்த   உண்மை   அவனது உணர்வும்   எனக்குள்   இருந்த   எண்ணங்களை   அவனது    காதல் அனுபவங்களோடு   சேர்க்கவே   கவிதையாய்   எழுதினேன்.   இதில் அவனது   முதல்   அனுபவம்.   நான்   அவன்   கூட   வீட்டிற்கு   செல்லும் நேரம்   பேருந்திலே   அவனிடம்   பேருந்து   சீட்டை (ticket)   எடுத்து தருமாறு   ஒரு   பெண்   கேட்டால்   அதை    அவன்   வாங்கி   சீட்டை கொடுப்பவரிடம் (conductor)    கொடுத்து   வாங்கி   தந்தான்   அந்த நேரம்   அவனை   அறியாமல்   பேருந்தில்   எறிய   ஒரு   பெண்   மிகுந்த   அழகுடனும்   பொறுமையுடனும்   அவளது   பேச்சும்  அவனை   துண்டு   துண்டாக்கி   விட்டது.

                            அவன்   அன்றிலிருந்து   அவன்   தன்னுடைய   செயல் பாவம்   எல்லாவற்றையும்   அவளுக்காக   மாற்றி   தினம்   தோறும் செல்லுவான்.   அவன்   அவளைப்   பற்றி   தெரிந்துக்   கொள்ள நினைத்து   எல்லாவற்றையும்   முயற்சி   செய்தான்   ஆனால்   ஒரு நாள்   அந்த   பெண்   கல்லூரியில்   அவனது   கலை   கல்லூரியில் சேர்ந்து   விட்டாள்.  இவனின்   சந்தோஷத்தை   இன்னோரு   பதிப்பில் பதிவிடுகிறேன்.  அந்த   பெண்   அவன்   கூட   சேர்ந்து  2   மாதங்கள் ஆன   பின்   தான்   இவன்   தன்   அறிமுகத்தை   கொடுத்தான். ஆவளோ கண்டு கொள்ளாமல் சென்று விட்டால் இதை அவன் என்னிடம் சொல்லும் போது எனக்கு வந்த சிரிப்பு அடக்க முடியாத ஒன்று. பிறகு அவன் நாட்கள் கடந்தவுடன் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர்.

Comments

Popular posts from this blog

FARMER LIFE

நட்பு